Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொக்ஸ்வேகன் வாகனங்களின் விற்பனை பிரித்தானியாவில் வீழ்ச்சி

In வணிகம்
Updated: 12:34 GMT, Nov 5, 2015 | Published: 12:25 GMT, Nov 5, 2015 |
0 Comments
1327
This post was written by : S.K.Guna

ஜேர்மனிய கார் தயாரிப்பு நிறுவனமான Volkswagen இன் வாகனங்களான பொக்ஸ்வேகன், சீற்,ஸ்கோடா ஆகிய காரர்களின் விற்பனை பிரித்தானியாவில் ஒக்டோபர் மாதமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

பொக்ஸ்வேகன் கார் தயாரிப்பு நிறுவனத்தின் மாசு ஊழல் பற்றிய சர்ச்சைகள் வெளியான பின்னர் அதன் வாகனங்களின் விற்பனை கணிசமான அளவு குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பொக்ஸ்வேகன் மோட்டார் வாகன தயாரிப்புக் குழுவானது டீசல் மற்றும் பெட்ரோலில் இயங்கும் கார்களில் இருந்து வெளியேறும் மாசுபாடு அளவின் மட்டத்தினை குறைத்து காட்டுவதற்காக மென்பொருள் ஒன்றை பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டு அந்த வாகன உற்பத்தி நிறுவனம்மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

பிரித்தானியாவில் ஒக்டோபர் மாத விற்பனையில் பொக்ஸ்வேகன் (Volkswagen) 9.8% , ஸ்கோடா (Skoda) 3% , சீற் (Seat) 32.2% வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் அவுடி(Audi), போர்ச் (Porsche) மற்றும் பென்ற்லி (Bentley) கார்களின் விற்பனை உயர்ந்துள்ளது.

பிரித்தானியாவில் ஒட்டுமொத்த, கார்களின் விற்பனை ஒக்டோபர் மாதம் 1.1% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளதாக தொழிற்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg