Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உக்காத கழிவுகளை ஒழிக்கும் ஒப்பந்தம் கைச்சாத்து

In வணிகம்
Updated: 09:01 GMT, Nov 24, 2015 | Published: 09:01 GMT, Nov 24, 2015 |
0 Comments
1255
This post was written by :

வடமேல் மாகாணத்தில் காணப்படும் உயிரியல் ரீதியில் உக்காத கழிவுகளை அழிப்பதற்காக உள்ளூராட்சி மன்றத்துடன் முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் LafargeHolcim இன் அங்கத்துவ நிறுவனமான Geocycle கைச்சாத்திட்டிருந்தது.

வடமேல் மாகாணத்தின் முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, வடமேல் மாகாண சபை உள்ளூராட்சி சபையின் ஆளுநர் புவனேக ஹேரத், Geocycle பொது முகாமையாளர் ரந்தீவ மலலசூரிய மற்றும் Geocycle கொள்கை மற்றும் வணிக அபிவிருத்தி முகாமையாளர் சஜித் எதிரிசூரிய ஆகியோர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்ததுடன், மாகாணத்தின் 33 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பொருந்தும் வகையில் இந்த உடன்படிக்கை அமைந்துள்ளது.

இந்த உடன்படிக்கையின் மூலமாக, Geocycle சகல உயிரியல் ரீதியில் உக்காத கழிவுகளையும் அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் போன்றன உள்ளடங்கியுள்ளதுடன், சூழலுக்கு நட்புறவான வகையில் இந்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது.

Geocycle இன் பொது முகாமையாளர் ரந்தீவ மலலசூரிய கருத்து தெரிவிக்கையில், “2014 இல் முன்னெடுக்கப்பட்ட பரீட்சார்த்த செயற்திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றிருந்தது. சிறந்த வாழ்வாதாரம் மற்றும் சூழலை பாதுகாப்பதற்கு Geocycle திட்டமிட்டுள்ளது. இது நீண்ட கால அடிப்படையிலான திட்டம் என்பதுடன், வட மேல் மாகாணத்தில் வசிக்கும் மக்களுக்கு சிறந்த சூழலை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும்”  என்றார்.

ஹொல்சிமின் கொள்கை திட்டத்தின் பிரகாரம் இந்த முதலாவது செயற்திட்டம் அமைந்துள்ளது. வட மேல் மாகாணத்தில் நான்கு புதிய சேரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளது. நீண்ட கால அடிப்படையில் வட மேல் மாகாணத்துக்கு நிலையான தீர்வை பெற்றுக் கொடுக்கவுள்ளதுடன், முழுமையாக மாசற்ற மாகாணமாக மாற்றவும் திட்டமிட்டுள்ளது. இது போன்ற பல செயற்திட்டங்களின் முதலாவது அங்கமாக இது அமைந்துள்ளதுடன், கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இது அறிமுகம் செய்யப்படவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg