Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிரீன் சிக்கன் குழம்பு

In
Updated: 08:39 GMT, Nov 29, 2015 | Published: 06:35 GMT, Nov 29, 2015 |
0 Comments
1284
This post was written by :

தேவையான பொருட்கள்:

கோழி இறைச்சி – அரை கிலோ (நன்கு சுத்தமாக கழுவியது)
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
தேங்காய் – 3 மே.கரண்டி (துருவியது)
பச்சை மிளகாய் – 2
புதினா – 1 கப்
கொத்தமல்லி – 2 கப்
சீரகம் – 1/2 தே.கரண்டி
மிளகு – 1/2  தே.கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
வெங்காயம் – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 மே.கரண்டி
பட்டை – 1
ஏலக்காய் – 5
வரமிளகாய் – 2
தண்ணீர் – 2 கப்

செய்முறை:

• வெங்காயம், கொத்தமல்லி, பச்சைமிளகாய், புதினாவை கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதன் பின்னர் மிக்ஸியில் தேங்காய், கொத்தமல்லி, புதினா, உப்பு, மஞ்சள் தூள், மிளகு, சீரகம், பாதி வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

• பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீதி உள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, ஏலக்காய், பட்டை, வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கிய பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து நன்கு வதக்க வேண்டும்.

• பிறகு அதில் சிக்கனை போட்டு நன்கு பிரட்டி, மசாலாவானது சிக்கனுடன் நன்கு ஒன்று சேர்ந்த பின்னர், அதில் கறிவேப்பிலை மற்றும் தண்ணீர் ஊற்றி, பாத்திரத்தை மூடி, பின் தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், கிரீன் சிக்கன் குழம்பு ரெடி!!!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg