Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி: ஏற்றுமதி தரகர்கள் தெரிவிப்பு

In வணிகம்
Updated: 08:55 GMT, Nov 29, 2015 | Published: 08:39 GMT, Nov 29, 2015 |
0 Comments
1277
This post was written by :

இலங்கையிலிருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் அளவில் பாரிய வீழ்ச்சி நிலை பதிவாகியிருப்பதாக தேயிலை ஏற்றுமதி தரகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருட ஏற்றுமதியினை இவ்வருடத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே ஜப்பானுக்கான தேயிலை ஏற்றுமதி இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் 6.9 மில்லியன் கிலோ தேயிலையே ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 7.7 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் தேயிலைக்கான கேள்வி குறைவடைந்து நிலையில், இந்த வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்படவேண்டிய விடயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg