Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விலை அதிகமாக விற்பவர்கள் குறித்த தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்

In வணிகம்
Updated: 09:52 GMT, Nov 29, 2015 | Published: 08:56 GMT, Nov 29, 2015 |
0 Comments
1281
This post was written by :

வரவு செலவு திட்டத்தின் மூலம் விலை குறைக்கப்பட்ட பொருட்கள், அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பில் 011-7755481 / 011-7755482 ஆகிய இலக்கங்கள் மூலம் தொடர்பு கொண்டு முறைப்பாடுகள் மேற்கொள்ள முடியும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மா, பருப்பு சில கருவாடு வகைகள், நெத்தலி உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த வரவு செலவுத்திட்டத்தில் இந்த பொருட்களுக்கான விலை குறைப்பு குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது.

விலை குறைப்பு கடந்த 24ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg