Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முருகனுக்கு உகந்த ஸ்லோகம்

In ஆன்மீகம்
Updated: 16:26 GMT, Mar 31, 2016 | Published: 16:22 GMT, Mar 31, 2016 |
0 Comments
1202
This post was written by :

செல்வ வளமும், உடல் நலமும் மேலோங்குவதற்காக இந்தத் துதியை தினமும் பாராயணம் செய்து வரலாம். வைகாசி விசாகத்தில் இதைச் சொல்வது மிக விஷேடம்.

சிவயோஸ்தனுஜாயாஸ்து ச்ரித மந்தாரசாகினே
சிகிவர்யதுரங்காய ஸுப்ரமண்யாய மங்களம்
பக்தாபீஷ்ட ப்ரதாயாஸ்து பவரோக விநாசினே
ராஜராஜாதி வந்த்யாய ரணதீராய மங்களம்
– சுப்ரமண்ய மங்களாஷ்டகம்

இதன் பொருள்: பார்வதி பரமேஸ்வரனின் புத்திரரே, அண்டியவர்களுக்கு கற்பக விருட்சம் போன்று கேட்ட வரங்களைத் தருபவரே, சிறந்ததும், அழகானதுமான மயிலை வாகனமாகக் கொண்டவரே, சுப்ரமண்ய பெருமானே நமஸ்காரம். பக்தர்கள் விரும்பியதை அளிப்பவரே, ஜனன, மரண ரோகத்தைப் போக்குபவரே, குபேரனால் வணங்கப்பட்டவரே, அரக்கரை வதைக்கும் யுத்தத்தில் பிரியமும், தைரியமும் கொண்டவரே, முருகப் பெருமானே நமஸ்காரம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg