Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகின் மிக அரிய வகை நீல வைரம் ஏலத்தில் விடப்பட்டது

In வணிகம்
Published: 08:46 GMT, Apr 10, 2016 |
0 Comments
1189
icon_com
This post was written by :
Jewel De Beers millennium 4

உலகிலேயே அரிய வகையில் கிடைக்கும் நீல வைரம் ஒன்று ஏலம் விடப்பட்டுள்ளது. இது சோத்பே ஏல நிறுவனத்தின் ஹொங்கொங் கிளையில் இம்மாதம் 5ஆம் திகதி ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

‘டி பீர்ஸ் மில்லேனியம் ஜுவல் 4′ என்று பெயரிடப்பட்ட இந்த வைரம் பாதாம் பருப்பைவிட சற்று பெரியது. தென்னாப்பிரிக்காவின் கல்லீனன் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்ட இது மிகவும் பெறுமதி மிக்கது.

குறித்த ஏலத்தின்போது, இந்த வைரம் மிக அதிகபட்சமாக 212 கோடி ரூபாவுக்கு ஏலம் எடுக்கப்பட்டது. எனினும் இதனை ஏலத்தில் பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பில் இதுவரையில் எந்த விவரம் வெளியிடப்படவில்லை.

உலகில் 10 கெரட்டை விட பெரிய நீல வைரங்கள் 12 மட்டுமே உள்ளன. ஹொங்கொங்கில் ஏலம் விடப்பட்ட குறித்த நீல வைரம் 10.10 கெரட் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg