Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோலம் நடுவே பூசணிப்பூ வைப்பது எதற்காக?

In ஆன்மீகம்
Updated: 11:43 GMT, Apr 15, 2016 | Published: 11:43 GMT, Apr 15, 2016 |
0 Comments
1242
icon_com
This post was written by : Anojkiyan
poo

மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து வாசலில் வண்ணக் கோலமிட்டு அதன் நடுவே சாணத்தில் பூசணிப் பூவை சொருகி வைப்பார்கள். மகாபாரத காலத்திலேயே இந்த நடைமுறை வழக்கத்தில் இருந்திருக்கிறது.

மார்கழி மாதத்தில்தான் குருஷேத்திரப் போர் நடந்தது. இரு பிரிவுகளுக்கு இடையே நடக்கும் சண்டை என்றால், இந்த தரப்பு வீரர்கள் யார்? அந்த தரப்பு வீரர்கள் யார் என எளிதில் கண்டுபிடித்து விடலாம். எல்லையை வைத்தோ, சீருடையை வைத்தோ அவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

குருசேத்திரப் போரில் பங்கேற்ற பாண்டவர், கவுரவர் இரண்டு தரப்பினருமே அஸ்தினாபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே ஊர்க்காரர்களில் யார் பாண்டவர் பக்கம்? யார் கவுரவர் பக்கம்? என எப்படி அடையாளம் காண்பது? இதற்காக கண்டுபிடிக்கப்பட்ட உபாயம்தான் ‘பூசணிப்பூ’. பாண்டவர்களுக்கு ஆதரவாய்ப் போரிட்ட வீரர்களின் வீடுகளை பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு அடையாளம் காட்டுவதற்காக அவர்களது வீட்டு வாசலில் கோலமிட்டு பூசணிப்பூ வைத்தார்களாம். புராணங்களில் இதற்கான செய்திகள் இருக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg