Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பட்டானி சிக்கன் கைமா

In
Updated: 09:48 GMT, Apr 28, 2016 | Published: 09:47 GMT, Apr 28, 2016 |
0 Comments
1227
icon_com
This post was written by : Risha
matar-keema

தேவையான பொருட்கள்;

கோழி இறைச்சி – 250 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
பச்சை பட்டாணி – 1 கப்
பட்டை, ஏலம், கிராம்பு – தலா 2
தக்காளி – 2
வொங்காயம் – 3
பச்சை மிளகாய் – 5
மிளகாய் தூள் – 1 கரண்டி
மல்லித்தூள் – 2 கரண்டி
மஞ்சள்தூள் – 1/4 கரண்டி
மசாலாத்தூள் – 1 கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு போட்டு தாளித்து அதில் வொங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கிய பிறகு அதில் இறைச்சியை சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கிய பிறகு மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மசாலாத்தூள் மற்றும் தேவையான உப்பு போட்டு நன்கு வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேக விட்டு இறக்கினால் மிகவும் சுவையான பட்டாணி சிக்கன் கைமா தயார்!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg