Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச ஏற்றுமதி அபிவிருத்தி மாநாடு இம்முறை இலங்கையில்

In வணிகம்
Published: 13:09 GMT, Jun 6, 2016 |
0 Comments
1226
icon_com
This post was written by :
International Export Development Summit

சர்வதேச ஏற்றுமதி அபிவிருத்தி மாநாட்டை இம்முறை இலங்கையில் நடாத்துவதற்கான உடன்படிக்கை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையில், சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் சர்வதேச வர்த்தக மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அரன்வா பொன்சாலென் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

சர்வதேச வர்த்தக மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் குறித்த மாநாடு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது. இதில் சர்வதேச அமைப்புக்களின் 600 பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்றுமதி, சுற்றாலாத்துறை போன்ற பல துறைகளிலும் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டுவரும் இலங்கைக்கு, நாட்டின் பொருளாதாரத்தை மேலும் அதிகரிக்க இது சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்று நம்பப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg