Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மச்சம் போன்ற கரும்புள்ளிகளை நீக்க சில வழிமுறைகள்!

In
Updated: 06:03 GMT, Jun 10, 2016 | Published: 06:00 GMT, Jun 10, 2016 |
0 Comments
1339
This post was written by : Anojkiyan

சிலருக்கு மச்சம் போன்று முகத்தில் ஆங்காங்கே கருப்பாக புள்ளிகள் இருக்கும். இதனை மச்சம் என்றும் வகைப் படுத்த முடியாது.

பிறந்ததிலிருந்தே இருக்கும். இவை முகத்தின் அழகை கெடுப்பது போல உணர்கிறீர்களா? அதனை நீக்க எளிய வழிமுறைகள் இதோ!

ஐஸ் மசாஜ் : ஐஸ் சருமத்தை இறுக்கமடையச் செய்யும். சுருக்கங்களை போக்கும். சில ஐஸ்துண்டுகளை ஒரு துணியில் கட்டி,மச்சங்களின் மீது தடவுங்கள். தினமும் 2 முறை செய்து கொண்டே வாருங்கள். நாளடைவில் அதன் அடர்தன்மை குறைந்து மறைந்துவிடும்.

ஒலிவ் எண்ணெய் : ஒலிவ் எண்ணெய் முழுமையாக அவற்றை நீக்காது. ஆனால் அவற்றின் நிறத்தை வெளிரச் செய்யும். ஒலிவ் எண்ணெயை வெதுவெதுப்பாக மச்சங்கள் இருக்குமிடத்தில் தடவுங்கள். நாளடைவில் அதன் நிறம் குறைந்துவிடும். சருமத்தின் நிறமும் கூடும். மிருதுத்தன்மையை தரும்.

விட்டமின் ஈ நிறைந்த ஒரஞ்ச் எண்ணெய் : விட்டமின் ஈ எண்ணெயை சருமத்தில் தடவினால், நல்ல மாற்றங்கள் கிடைக்கும். குறிப்பாக ஒரஞ்ச் எண்ணெய் அவற்றின் மீது வேகமாக செயல்படுகிறது. தினமும் காலை, மாலை ஒரஞ்ச் எண்ணெயை மச்சங்களின் மீது தடவி வந்தால் மறைந்துவிடும். விட்டமின் ஈ நிறைந்த உணவுகளை உண்டாலும் சீக்கிரம் பலன் கிடைக்கும்.

எலுமிச்சை : எலுமிச்சை சாறில் சிறிது பால் கலந்து மச்சங்களின் மீது தடவி வாருங்கள். வேகமாய் அவற்றின் மீது செயல்படும். சீக்கிரம் பலன் தரும்.

விட்டமின் நிறைந்த பழங்கள் : ஆப்ரிகாட், கிவி பழங்களின் சதைப்பகுதியை முகத்தில் தடவி வந்தால் நாளடைவில் மச்சங்கள் மறைந்துவிடும். அதேபோல் நிறைய விட்டமின் சத்து அடங்கியுள்ள வாழைப்பழம், வெள்ளரி ஆகியவற்றையும் மசித்து போட்டால் முகத்தின் கரும்புள்ளிகள் மறையும்.

தக்காளி சாறு : தக்காளி சாறில் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைய உள்ளது. சரும செல்களின் பாதிப்பை குறைக்கும். இவற்றை மச்சங்களின் மீது தினமும் போட்டு வந்தால், விரைவில் பலன் கிடைக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg