Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்­கையில் முத­லா­வது ஸ்மார்ட் சுவிட்ச் LED மின்­கு­மிழ்

In வணிகம்
Updated: 07:35 GMT, Jul 5, 2016 | Published: 07:33 GMT, Jul 5, 2016 |
0 Comments
1108
This post was written by : Risha

இலங்­கையின் முத­லா­வது ஸ்மார்ட் சுவிட்ச் LED மின்­கு­மிழை குளோபல் றிசோர்சஸ் இன்­டர்­ந­ஷனல் (பிரைவேட்) லிமிட்டெட் நிறு­வனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், இவ்­வா­றான அதி­ந­வீன உற்­பத்தி ஒன்றை முத­லா­வ­தாக வழங்­கிய நிறு­வனம் என்ற பெரு­மையை குளோபல் றிசோர்சஸ் இன்டர்நஷனல் நிறு­வனம் தம­தாக்கிக் கொண்­டுள்­ளது. ஒரு தொலை­வி­யக்க கரு­வியில் உள்ள ஒரு பட்டனை அழுத்துவதன் மூல­மாக ஒளிவிளக்கு முறை­மையை கட்­டுப்­ப­டுத்தி இயக்­கு­கின்ற வச­தியை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அளிக்­கின்ற அதி­ந­வீன மின்­னியல் துணையுற்பத்தியாக இது காணப்­ப­டு­கின்­றது.

ஸ்மார்ட் சுவிட்ச் LED மின்­கு­மிழை எந்­த­வொரு தொலை­வி­யக்­க கரு­வி­யையும் பயன்ப­டுத்தி 10 மீற்றர் சுற்­றெல்­லையில் இருந்து இயக்க முடியும்.

அதா­வது LED சாதனம், தொலைக்­காட்சி அல்லது காற்­றுச்­சீ­ராக்­கியின் தொலை­வி­யக்ககரு­வி­க­ளையும் இதற்­காக பயன்­ப­டுத்­தலாம். வாடிக்கையா­ளர்கள் தம்­மு­டைய இன்ஃபி­ராரெட் கைய­டக்க தெலைபே­சி­க­ளையும் இதற்­காக பயன்­ப­டுத்­தலாம் என்றாலும், அதன்பொருட்டு பிரயோக மென்பொருள் ஒன்றை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg