Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அருண் ஜெட்லி நிதி அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கலாம்: சிதம்பரம்

In இந்தியா
Updated: 06:47 GMT, Nov 28, 2016 | Published: 06:46 GMT, Nov 28, 2016 |
0 Comments
1282
This post was written by : Elakkiya
201611281104224621_p-chidambaram-speech-rupees-invalid-announce-finance_secvpf

ரூபா நாணயத்தாள்கள் செல்லாது என்று அறிவிப்பதை விடவும் நிதி அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருப்பேன் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று இடம்பெற்ற இலக்கிய விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் இடத்தில் நான் இருந்திருந்தால் 500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து ஆலோசித்திருப்பேன். ஒருவேளை என்னுடைய ஆலோசனையை பிரதமர் மோடி செவிமடுக்கவில்லை எனில் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருப்பேன். ‘ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘500 ரூபா மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்களை இல்லாது ஒழிப்பதால் கறுப்புப்பணத்தை முற்றாக இல்லாதொழிக்க முடியாது. அதேபோன்று ஊழலையும் அகற்ற முடியாது.

அனைத்து ஆட்சியிலும் ஊழல் இடம்பெற்றுள்ளது. பத்து வருடங்கள் காங்கிரஸிலும் ஊழல் இடம்பெற்றது. அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். நேரு காலத்திலும், இந்திரா காந்தி ஆட்சி காலத்திலும் கூட ஊழல்கள் நடந்தன. இதற்காக காங்கிரஸ் ஆட்சியில் மட்டுமே ஊழல் நடந்ததாக சொல்வது சரியல்ல. ஊழலை ஒழிக்க காங்கிரஸ் கட்சி விழிப்புணர்வுடன் செயல்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். காங்கிரஸை சேர்ந்த மத்திய மந்திரிகளும் இந்த விடயத்தில் விழிப்புணர்வுடன் செயல்படவில்லை.’ என்றும் கூறினார்.

தொடர்ந்து, மத்திய அரசினால் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட 2000 ரூபா நாணயத்தாளை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டிய சிதம்பரம் இந்த விடயத்தில் மத்திய அரசு எத்தகைய நடவடிக்கை எடுத்தது? எனவும் கேள்வி எழுப்பினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg