Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிப்பது தொடர்பான வாக்கொடுப்பு நாளை

In
Updated: 05:51 GMT, Nov 29, 2016 | Published: 04:45 GMT, Nov 29, 2016 |
0 Comments
1299
This post was written by : Anojkiyan

ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா மீது, புதிய பொருளாதார தடை விதிப்பது தொடர்பான வாக்கெடுப்பை ஐ.நா. பாதுகாப்பு சபை நாளை (புதன்கிழமை) நடத்தவுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் உத்தரவை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை அரங்கேற்றி வரும், வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பையும் சம்பாதித்து வருகின்றது.

இந்நிலையில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. பாதுகாப்பு சபையில் உள்ள 15 நாடுகளுக்கும் தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை இதற்கான வாக்கெடுப்பு இடம்பெறும். பெரும்பாலும் வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அத்தியவசிய பொருட்கள் மீது தடை விதிக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் பல்வேறு பொருளாதார தடைகளுக்கு உள்ளாகியிருக்கும் வடகொரியாவுக்கு இத்தடையும் பெரிடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg