Chrome Badge

கோடிக்கணக்கில் கொடுத்தாலும் ரொனால்டொவை ஏலம்பெற முடியாது: ஜோஸ் மென்டிஸ்

In
Updated: 09:53 GMT, Dec 30, 2016 | Published: 09:53 GMT, Dec 30, 2016 |
0 Comments
1487
_93176329_ronaldo

பெயர் வெளியிடப்படாத ஒரு சீன கால்பந்து கழகம் பல கோடி ரூபாய் கொடுத்தேனும், போர்த்துக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்றியானோ ரொனால்டோவை ஏலம் பெற மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது என்று ரொனால்டோவின் முகவர் தெரிவித்துள்ளார்.

ரொனால்டோவின் கழக ஒப்பந்தங்களிற்கு பொறுப்பாக செயற்படும் அவரது முகவர் ஜோஸ் மென்டிஸ் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பெயர் வெளியிடப்படாத ஒரு சீன கால்பந்து கழக நிறுவனம், ரியல் மான்டிட் அணிக்காக விளையாடிவரும் ரொனால்டோவை 250 மில்லியன் யூரோக்கள் கொடுத்து ஏலத்தில் பெற முயற்சி செய்தது. அத்துடன் வருடம் தோறும் 85 மில்லியன் யூரோக்களை சம்பளமாகக் கொடுப்பதற்கும் சம்மதித்திருந்தது.

இருந்த போதிலும் ரொனால்டோ ரியல் மாட்ரிட்டை விட்டு விலகுவதற்கு மறுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘சீனாவின் புதிய கால்பந்து கழகத்தினால் அதிக தொகை கொடுத்து எத்தனை வீரர்களையேனும் பெற முடியும். ஆனால் கிறிஸ்றியானோ ரொனால்டொவை அவர்களால் ஒருபோதும் பெற முடியாது. அதேவேளை, பணம் என்பது ரொனால்டொவிற்கு முக்கியமல்ல. ஸ்பெய்னின் கழக அணியாக ரியல் மாட்ரிட் அவருடைய வாழ்க்கை’ என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)