Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சோமாலியத் தலைநகர் மொஹதீசுவில் கார் குண்டுத் தாக்குதல்: குறைந்தது மூவர் உயிரிழப்பு

In
Updated: 13:29 GMT, Jan 2, 2017 | Published: 12:17 GMT, Jan 2, 2017 |
0 Comments
1344
This post was written by : Sylviya

சோமாலியத் தலைநகர் மொஹதீசுவில் (Mogadishu), இன்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்டுள்ள கார் குண்டுத் தாக்குதலில், குறைந்தது மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கார் குண்டுத் தாக்குதல், மொஹதீசுவில் அமைந்துள்ள விமான நிலையம் ஒன்றிற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த தாக்குதலில் உயிரிழந்த மூவரும் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த சோமாலி பொலிஸார் ஒருவர், “விமானநிலையத்திற்கு அருகே வந்த கார்களை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்திய போதே வெடிபொருட்களால் நிரம்பியிருந்த குறித்த கார் வெடித்துச் சிதறியது” என தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும், குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் அண்மைய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளாக அல் – கைதாவுடன் தொடர்புடைய அல் – ஷபாப் தீவிரவாதக் குழு, சோமாலிய அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் பல தாக்குதல்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg