Chrome Badge

பேஷ்மெர்கா படைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பிரான்ஸ் வழங்கும்: பிரான்சுவா

In
Updated: 15:22 GMT, Jan 3, 2017 | Published: 11:03 GMT, Jan 3, 2017 |
0 Comments
1160

ஈராக்கில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் புரியும் குர்தீஷ் பேஷ்மெர்கா படைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பிரான்ஸ் வழங்கும் என, பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலன்ட் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குர்தீஷ் தலைவர் மஸாட் பர்ஸானியுடன் (Masoud Barzani), ஸர்டாட்டா (Zardata) எனும் பகுதிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈராக்கின் வடக்கில் அமைந்துள்ள நகரமான மோசுல் மற்றும் நினிவே மாகாணத்தில் உள்ள பேஷ்மெர்கா மற்றும் ஈராக்கிய படைவீரர்கள், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களில் முன்னேறிச் செல்வதை காணுவதே அவர் ஸர்டாட்டா பகுதிக்கு விஜயம் மேற்கொண்டதன் முக்கிய நோக்கம் என பிரான்சுவா தெரிவித்துள்ளார்.

ஸர்டாட்டா பகுதிக்கு பிரான்சுவா ஹோலன்ட் விஜயம் மேற்கொண்டிருப்பது இத்துடன் இரண்டாவது முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)