Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

பண்டாரவன்னியன் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர் போல் காட்சி அளிக்கிறார்: எஸ்.மயூரன்

In
Published: 17:57 GMT, Jan 10, 2017 |
0 Comments
1342
pandara-vanniyan

மல்லாவி நகரில் உள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் உருவ சிலையை எதியோப்பிய மற்றும் சோமாலியா போன்ற நாடுகளில் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.மயூரன் கவலை வெளியிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 82ஆம் அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) மாகாண சபை பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது குறித்த உருவ சிலை தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மல்லாவி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு கீழ் பண்டாரவன்னியன் என எழுதினால் மட்டுமே அது பண்டாரவன்னியனின் சிலை என பார்ப்பவர்களுக்கு புரியும்.

ஒரு மாவீரனின் சிலையை சோமாலியா, எதியோப்பியா போன்ற நாடுகளில் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் தோற்றத்தில் அமைத்துள்ளார்கள்.

வெளிநாட்டில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் இங்கே வருகிறவர்கள் அந்த சிலையை பார்த்தால் தமிழர்களின் வீரம் குறித்து என்ன நினைப்பார்கள், இது பண்டாரவன்னியனை கொச்சை படுத்தும் ஒரு செயல் போன்று அமைகிறது” என குறிப்பிட்டார்.