Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

In இலங்கை
Published: 09:07 GMT, Jan 12, 2017 |
0 Comments
1093
icon_com
This post was written by : Varshini
puttlam - school needed things (3)

புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலைக்கு இவ்வருடம் புதிதாக இணைந்த வசதி குறைந்த 15 மாணவர்களுக்கும் சமீரகம முஸ்லிம் பாடசாலையில் இணைந்த மாணவர்களில் 13 மாணவர்களுக்கும் இஸ்லாமிய மார்க்கக் கல்வி கற்றும் மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தினால் இந்த பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை, பெருக்குவட்டான் சமீரகம முஸ்லிம் பாடசாலைகளில் இவ்வருடம் புதிதாக அனுமதிக்கப்பட்ட 28 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள், புத்தகப்பை, புத்தகங்கள், காலுறை மற்றும் பாதணிகள் என பல பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.ஹில்மி தலைமையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்நிகழ்வில், புத்தளம் ஆன்மீக ஒருமைப்பாட்டு நிலைய தலைவரான அஷ்ஷெய்க் எச்.அப்துல் நாஸர், சமீரகம முஸ்லிம் பாடசாலை அதிபர் அஷ்ஷெய்க் எம்.என்.எம்.மிஹ்லார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

puttlam - school needed things (2) puttlam - school needed things (4) puttlam - school needed things (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg