Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்து வர்த்தகங்களை மகன்மாரிடம் ஒப்படைத்தார் ட்ரம்ப்

In
Updated: 10:31 GMT, Jan 12, 2017 | Published: 10:31 GMT, Jan 12, 2017 |
0 Comments
1256
This post was written by : Risha

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 20ஆம் திகதி பதவியேற்கவுள்ள நிலையில், அவரது ஸ்கொட்லாந்து வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தையும் மகன்மாரிடம் ஒப்படைத்துள்ளார்.

ஸ்கொட்லாந்தின் ஆர்ஷர் மற்றும் அபர்டீன்ஷர் ஆகிய பகுதிகளில் ட்ரம்பிற்கு சொந்தமான இரு கொல்ஃப் மைதானங்கள் காணப்படுகின்றன. அவற்றின் நிர்வாகங்கள் ட்ரம்பின் புதல்வர்களான எரிக் மற்றும் டொனால்ட் ஆகியோரிடம் ஒப்படைக்கப்படுவதாக ட்ரம்பின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், தொழிலதிபரான ட்ரம்ப், ஜனாதிபதியாக பதவியை பொறுப்பேற்றதன் பின்னர் எவ்வித புதிய வெளிநாட்டு ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளமாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg