Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலை வடகம்

In
Updated: 16:00 GMT, May 5, 2018 | Published: 10:48 GMT, May 4, 2018 |
0 Comments
1282
This post was written by : Risha

தேவையான பொருட்கள்
இட்லி அரிசி 1/2 கப்
பச்சை அரிசி 1/2 கப்
ஜவ்வரிசி 1 மேஜைக்கரண்டி
சீரகம் 1/4 தேக்கரண்டி
ஓமம் 1 சிட்டிகை
பச்சை மிளகாய் 10
பெருங்காயம் 1 சிட்டிகை
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொறிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை
1. இட்லி அரிசி, பச்சை அரிசி மற்றும் ஜவ்வரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து பின்னர் அரிசிகளை தண்ணீரில் குறைந்தது 5 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். அரிசியை மற்றும் ஜவ்வரிசியை வடித்து விட்டு மிக்ஸியில் நைசாக நன்றாக அரைக்கவும். பச்சை மிளகாயை மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.

2. மாவு அரைத்த பிறகு அதில் சீரகம், பெருங்காயம், ஓமம், தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கலக்கவும். பச்சை மிளகாய் விழுதை மாவு கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை 2 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

3 . இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு சிறிய பாத்திரத்தை மிதக்க விட வேண்டும். அதில் ஒரு இட்லி பாத்திரத்திற்கு ஏற்றவாறு தட்டை அந்த தட்டின் மேல் ஒரு வாழை இலையை வைக்கவும்.

4. அந்த இலையின் மீது ஒரு கரண்டி மாவை ஊற்றி நன்றாக தேய்க்க வேண்டும். தோசை வார்ப்பது போல் நன்றாக வாழை இலையில் தேக்க வேண்டும். இப்பொழுது அதை ஆவியில் வேக வைக்கவும். இது வேக 1 நிமிடம் அவ்வளவு தான்.

5. சூடாக உள்ள போதே வடகத்தை இலையில் இருந்து வெகு சுலபமாக ( ஈசியாக ) எடுத்து விடலாம். இதேபோல் அனைத்து மாவையும் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

6. வீட்டுல உள்ள ஒரு காட்டன் வேட்டி இதற்கு சரியாக இருக்கும். அதில் இலையில் இருந்து உரித்த வேகவைத்த வடகத்தை வேட்டியில் வைத்து வெயிலில் ( சன்லைட் ) வைக்கவும்.

7. நேரடியாக வெயிலில் வைத்தால் 2 அல்லது 3 மணி நேரத்துல காய்ந்து விடும்.

8. காற்று புகாத டப்பாவில் போட்டு பத்திரபடுத்தி கொள்ளாம்.

9. வடச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடகத்தை போட்டால் இரண்டு மடங்காக பொரிந்து வரும்.

vada1

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg