Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்பட இயக்குனர்கள் மரியாதை தரவில்லை: ராதிகா ஆப்தே

In சினிமா
Updated: 10:56 GMT, Feb 11, 2017 | Published: 10:56 GMT, Feb 11, 2017 |
0 Comments
1132
icon_com
This post was written by : Elakkiya
201702101556575398_Tamil-movie-directors-not-respect-me-radhika-apte-complaint_SECVPF

தமிழ்பட இயக்குனர்கள் மரியாதை தரவில்லை என நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

‘கபாலி’ படத்தில் ரஜினியுடன் ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே சமீபத்தில் வழங்கிய பேட்டி ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ தென் இந்திய சினிமாவில் ஹீரோக்களுக்குத்தான் மதிப்பு. அவர்களுக்குத்தான் நட்சத்திர ஹோட்டல்களில் அறை கொடுப்பார்கள். நடிகைகளுக்கு சாதாரண ஹோட்டல் அறைதான்.

நடிகர்கள் எவ்வளவு தாமதமாக வந்தாலும் எதுவும் கேட்க மாட்டார்கள். ஆனால் நடிகைகள் படப்பிடிப்பு தொடஙகுவதற்கு முன்பே அங்கு இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். இது மாதிரி நிறைய விஷயங்கள் நடக்கும். இதனால் நான் பாதிப்பு அடைந்திருக்கிறேன்.

‘கபாலி’ படம் தவிர வேறு எந்த படத்திலும் தமிழ்பட இயக்குனர்கள் எனக்கு மரியாதை தரவில்லை. ரஜினியும் ‘கபாலி’ பட இயக்குனர் ரஞ்சித்தும் மட்டுமே என்னை மதித்தார்கள். அதற்காக எல்லோரையும் குற்றம் சாட்டவில்லை. நான் நடித்த படங்களில் பணியாற்றிய அனுபவங்களை வைத்தே இதை சொல்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg