Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

250 விக்கெட்டுக்கள் கைப்பற்றியதை சாதனையாக கருதுகிறேன்: அஸ்வின்

In கிாிக்கட்
Updated: 06:29 GMT, Feb 13, 2017 | Published: 06:28 GMT, Feb 13, 2017 |
0 Comments
1319
icon_com
This post was written by : Shailu
Ashwin

அதிவேகத்தில் 250 விக்கெட்டுக்களை கைப்பற்றியதை, நான் சாதனையாக கருதுகிறேன் என இந்திய அணி சுழற்பந்து வீரர் ஆர்.அஸ்வின் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் கூறுகையில்,

“அதிவேகத்தில் 250 விக்கெட் கைப்பற்றியதை நான் சாதனையாக கருதுகிறேன். இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக அமையவில்லை. முதல் இன்னிங்சில் எனது பந்து வீச்சு நேர்த்தியாக அமையவில்லை.

2-வது இன்னிங்சில் எனது பந்துவீச்சு மிகவும் நேர்த்தியாக இருந்தது மகிழ்ச்சி அளித்தது. புதிய பந்தில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினேன்.’ என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்டில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரரான ஆர். அஸ்வின் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்களை கைப்பற்றினார். இதன்மூலம் அஸ்வின் 250-வது விக்கெட்டை வீழ்த்தினார்.

இதன்மூலம் 45-வது டெஸ்டில் 250 விக்கெட்டை வீத்திய வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளதோடு, 250 விக்கெட்டை கைப்பற்றிய 6-வது இந்தியர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg