Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேவையேற்படின் வாய்த் தர்க்கத்திலும் ஈடுபடுவதற்கு தயார்: ஸ்டீவ் ஸ்மித்

In கிாிக்கட்
Updated: 11:43 GMT, Feb 14, 2017 | Published: 11:43 GMT, Feb 14, 2017 |
0 Comments
1344
This post was written by : Elakkiya

இந்திய அணியுடனான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெற்றிபெறுவதற்கு தேவையேற்படின் வாய்த் தர்க்கத்திலும் ஈடுபடுவதற்கு தயார் என அவுஸ்ரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய அணி எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.

இத் தொடர் குறித்து கருத்து தெரிவித்த ஸ்டீவ் ஸ்மித், ”அவுஸ்ரேலிய அணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வீரர்களும் அவர்களுடைய இயல்பான பாணியில் விளையாடுவார்கள். இந்திய அணிக்கெதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, வார்த்தை போர்களில் ஈடுபட விரும்பினால், அதையும் செய்வோம். இந்திய அணியுடன் விளையாடுவது குறித்து அவுஸ்ரேலிய வீரர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். இந்திய மண்ணில் விளையாடுவது மிகப்பெரிய சவாலானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg