Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூர்யாவுடன் இணைந்து சிங்கம்-4 தயாரிப்போம்: ஹரி உறுதி

In சினிமா
Updated: 10:40 GMT, Feb 15, 2017 | Published: 10:37 GMT, Feb 15, 2017 |
0 Comments
1238
icon_com
This post was written by : Risha
Hari (1)

நானும் சூர்யாவும் இணைந்து நிச்சயமாக சிங்கம் 4 படம் பண்ணுவோம் என இயக்குனர் ஹரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற சிங்கம் 3 படத்தின் தெலுங்குப் பதிப்பு வெற்றி விழாவில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், நானும் சூர்யாவும் இணைந்து நிச்சயமாக சிங்கம் 4 படம் பண்ணுவோம். என்னுடைய அடுத்தப் படமாக சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ள நிலையில், சிங்கம் – 4 நான்கைந்து வருடங்களின் பின்னர் தயாரிக்கப்படும் என்றார்.

சூர்யா – இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவான சிங்கம் – 3 கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி வெளியானது. ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற இத்திரைப்படம் வெளியாகி 6 நாட்களில் ரூபா 100 கோடி வசூல் செய்துள்ளது.

இதற்கு முன்னர் வெளியான இரு பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg