Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையிலும் செயற்பாடுகளை ஆரம்பித்தது Oxford Elevators!

In வணிகம்
Published: 10:22 GMT, Feb 19, 2017 |
0 Comments
1160
icon_com
This post was written by : Sylviya
14

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் Oxford Elevators கம்பனி (OEC) அண்மையில் தனது செயற்பாடுகளை இலங்கையில் அங்குரார்ப்பணம் செய்துள்ளது.

வணிக உட்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் இலங்கை பாரியளவு வளர்ச்சியை சந்தித்துள்ள நிலையிலேயே குறித்த நிறுவனம் தனது செயற்பாடுகளை இலங்கையில் ஆரம்பித்துள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜாவில் நிறுவப்பட்டுள்ள OEC குழுமம் துபாய், அபுதாபி, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் சென்னை, மும்பாய், பெங்களுர், கொல்கத்தா மற்றும் அஹமதாபாத் ஆகிய பகுதிகளில் அலுவலகங்களை கொண்டுள்ளது.

இந்நிலையில், Oxford Elevators  கம்பனியின் (OEC) ஸ்தாபகரும் தலைவருமான எஸ்.ஜே.காதர் சாஹிபுவின் வழிகாட்டலின் கீழேயே குறித்த செயற்பாடுகள் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிறுவனத்தால் அதிவேக, சுழற்சியான, வீட்டு மற்றும் machine room less (MRL)  உள்ளடங்கலாக car lifts> escalators> travellators> moving walks> scissor lifts> dump waiters மற்றும் தரிப்பு கட்டமைப்புகள் போன்றவற்றை நிறுவுதல் மற்றும் நவீனப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

Oxford Elevators பிரைவட் லிமிட்டெட் (இலங்கை) நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அஹமட் கே. ராஜா இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “15 வருட கால உத்தரவாதத்துடன் பார உயர்த்திகளை Oxford இலங்கைக்கு அறிமுகம் செய்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பொருத்துகை மற்றும் முழுமையான பராமரிப்பு சேவைகள் போன்றன வழங்கப்படும். சகல விதமான வர்த்தக நாமங்களின் பழுதுபார்ப்புகள் மற்றும் நவீனமயப்படுத்தல்கள் போன்றனவும் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg