Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியா – இந்தியா ஏ அணிகளின் 3 நாள் பயிற்சி போட்டி சமநிலையில் நிறைவு

In கிாிக்கட்
Updated: 04:38 GMT, Feb 20, 2017 | Published: 04:21 GMT, Feb 20, 2017 |
0 Comments
1112
icon_com
This post was written by : Shailu
shreyas iyer

அவுஸ்ரேலியா – இந்தியா ஏ அணிகளுக்கிடையே இடம்பெற்ற 3 நாள் பயிற்சி போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

மும்பை, பிராபோர்ன் அரங்கத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா ஏ அணி முதலில் களதடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி துப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி முதல் இன்னிங்சை 7 விக்கெட் இழப்புக்கு 469 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 107 ஓட்டங்கள், ஷான் மார்ஷ் 104 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். அடுத்து களமிறங்கிய இந்தியா ஏ அணி 2ஆம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், ஷ்ரேயாஸ் அய்யர் 85 ஓட்டங்கள், ரிஷப் பன்ட் 3 ஓட்டங்களுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாள் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.

இதில் ஷ்ரேயாஸ் – கௌதம் ஜோடி 7வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 138 ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்தனர். இதனையடுது. இந்தியா ஏ அணி 403 ஓட்டங்களுக்க சகல விக்கட்டகளையும் இழந்தது.

இதில் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்த ஷ்ரேயாஸ் 210 பந்துகளில் 27 நான்கு ஓட்டங்கள், 7 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 202 ஓட்டங்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதைத் தொடர்ந்து, 66 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆரம்பித்த அவுஸ்ரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்கள் பெற்றுக்கொண்ட நிலையில், இந்த போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg