Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவிலும் தொடர் போராட்டத்திற்கு ஏற்பாடு

In இலங்கை
Published: 03:45 GMT, Feb 22, 2017 |
0 Comments
1111
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

வவுனியாவில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) முதல், காணாமல் போனோரின் உறவினர்கள் சுழற்சிமுறையில் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சங்கத்தினர் தமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வவுனியா அருந்ததி விருந்தினர் விடுதியில் நேற்று சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். குறித்த சந்திப்பின்போதே இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

வவுனியாவில் கடந்த ஜனவரி மாத பிற்பகுதியில், காணாமல் போனோரின் உறவினர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது இப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தருவதாக அங்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தை முடித்துவைத்த பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன உறுதியளித்திருந்தார்.

அதன் பிரகாரம் கடந்த 9ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது சாதகமான முடிவெதுவும் எட்டப்படாத நிலையில், இம் மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை காணாமல் போனோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரக போராட்டம், மூன்றாவது நாளாக இன்று தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

missing person (3) missing person (1)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg