Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற விடமாட்டோம்: வழக்கறிஞர் பி.வி ஆச்சார்யா

In இந்தியா
Updated: 11:05 GMT, Feb 23, 2017 | Published: 11:05 GMT, Feb 23, 2017 |
0 Comments
1216
icon_com
This post was written by : Shailu
acharya-sasi

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற விடமாட்டோம் என கர்நாடக அரசு வழக்கறிஞர் பி.வி ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் கூறுகையில்,

‘சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற உத்தரவிடப்பட்டால், கர்நாடக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம். சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா மறு சசீராய்வு மனு தாக்கல் செய்ய அடிப்படை ஆதாரங்கள் எதுவும் கிடையாது.

சசிகலாவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதால், பிணை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இதனையும் மீறி முயற்சித்தால் 6 மாதங்கள் சிறையில் இருந்த பின்பே சசிகலா நிபந்தனை பிணையில் வெளியே வர முடியும்.’ என அவர் தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களுரு பரப்பன அக்ராஹரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், சசிகலாவை பெங்களுரு சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்ற அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு கர்நாடக அரசு வழக்கறிஞர் பி.வி ஆச்சார்யா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg