Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியாவின் பிரதிநிதிகள் குழுவை சந்தித்தார் ஐ.நாவின் சிறப்புத் தூதுவர்

In உலகம்
Published: 05:34 GMT, Feb 25, 2017 |
0 Comments
1240
icon_com
This post was written by : Sylviya

ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் ஸ்டெபன் டி மிஸ்ரூரா (Staffan de Mistura) நேற்று (வெள்ளிக்கிழமை) சிரிய சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் பொருட்டு சிரியாவின் பிரதிநிதிகள் குழுவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பு ஜெனீவாவில் நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது அவர் மேற்குறித்த பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரிய சமாதான பேச்சுவார்த்தைகள் குறித்த திட்டங்கள் தொடர்பில் கலந்தரையாடும் பொருட்டே அவர் இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளார் எனவும் குறித்த பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பப் பகுதி வரை தொடரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 மாதங்களுக்கு முன்னதாக நடத்தப்பட்ட சிரிய சமாதான பேச்சுவார்த்தை தொடர்பான நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெற்றதோடு சிரியாவில் தொடர்ந்த யுத்தம் காரணமாக குறித்த சமாதான பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg