Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதாவின் புகைப்படங்களை அரச அலுவலகங்களில் வைப்பது தொடர்பில் உயர் நீதிமன்றம் விளக்கம்

In இந்தியா
Published: 12:21 GMT, Feb 27, 2017 |
0 Comments
1141
icon_com
This post was written by : Surenth
Jayalalitha Death

தமிழக அரச அலுவலங்களில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை வைப்பது தொடர்பில் தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.

தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தொடர்ந்த இந்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என அன்பழகனால் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பான விளக்கத்தை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg