Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவுடனான வர்த்தக உடன்படிக்கைகளுக்கு தயார்: ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர்

In கனடா
Updated: 11:27 GMT, Mar 27, 2017 | Published: 11:26 GMT, Mar 27, 2017 |
0 Comments
1172
This post was written by : Elakkiya

ஐரோப்பிய ஒன்றியத்துடனான கனடாவின் வர்த்தக உடன்படிக்கைகளுக்கு தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் செசிலியா மல்ம்ஸ்ரோம் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பரந்தளவிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தற்காலிகமாக விண்ணப்பிப்பதற்கு கனடா தயாராகி வருகின்றது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒட்டாவாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த செசிலியா மல்ம்ஸ்ரோம் மேற்படி கருத்தினை வெளியிட்டார். இதன்போது கனடாவின் முடிவுக்காக தற்போது ஐரோப்பிய ஒன்றியம் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான கனடாவின் வர்த்தக உடன்படிக்கைகள் குறித்த எட்டு ஆண்டு பேச்சுவார்த்தைகள் மற்றும் பரப்புரைகளுக்கான மதிப்பினை ஆதரவாளர்கள் கண்டறிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பரந்தளவிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்திற்கான வாக்கெடுப்பு கடந்த பெப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் ஏப்ரல் முதலாம் திகதி தற்காலிகமாக விண்ணப்பிக்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்திருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் வாரத்திற்குள் உடன்படிக்கை அமுலுக்கு கொண்டுவரப்படும் என்றும் மல்ம்ஸ்ரோம் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg