Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புகையிரத ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: நிமல்

In இலங்கை
Updated: 04:16 GMT, Mar 28, 2017 | Published: 02:36 GMT, Mar 28, 2017 |
0 Comments
1120
icon_com
This post was written by : Ravivarman
nimal-siripala

புகையிரத ஊழியர்களின் சம்பள பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) இடம்பெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

இந்த யோசனைக்கு பொது நிர்வாக அமைச்சினதும் நிதியமைச்சினதும் ஆலோசனைகள் பெறப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 21ம் திகதி அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததாக அமைச்சர் கூறியுள்ளார். இதற்கமைய தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துக்களை பெற்று சம்பள ஆணைக்குழுவின் ஊடாக உரிய மேற்பார்வை அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு அமைச்சரவை பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சரின் மேற்படி வாக்குறுதியினை அடுத்து நேற்று நள்ளிரவு ஆரம்பிக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கத்தின் தலைவர் ஐ.எல்.கே.திசாநாயக்க அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg