Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெற்கு யேமன் தற்கொலை குண்டுத் தாக்குதல்: 11இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

In உலகம்
Published: 06:30 GMT, Mar 28, 2017 |
0 Comments
1262
icon_com
This post was written by : Sylviya

தெற்கு யேமனில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கித் தாக்குதல்களில் 11இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம், நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்டதாகவும் இந்த தாக்குதலின் பின்னணியில் அல் – கொய்தா தீவிரவாதிகளே இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.

வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட சிறிய ரக பேரூந்து ஒன்றில் வந்த தீவிரவாதிகள் அல் – ஹூதாவில் (al-Houta) அமைந்துள்ள அரச பாதுகாப்பு கட்டிட வளாகத்திற்குள் நுழைய முற்பட்டதாகவும் அங்கிருந்த யேமனிய பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் தொடர்பான அண்ணளவான எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ள போதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும், இந்த தாக்குதலில் 15 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அல் – கொய்தா தீவிரவாதிகளின் பிரசன்னத்தை பரப்பும் வகையில், கடந்த இரண்டு வருடங்களாக யுத்தம் நடத்தப்பட்டு வரும் நிலையிலேயே நேற்றைய தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg