Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடிகர் சங்க கட்டடம் அமைக்கும் பணிகள் எதிர்வரும் 31ஆம் திகதி ஆரம்பமாகும்

In சினிமா
Updated: 11:28 GMT, Mar 28, 2017 | Published: 10:14 GMT, Mar 28, 2017 |
0 Comments
1114
icon_com
This post was written by : Vithushagan
201703281127499756_Actor-Association-union-building-ceremony-on-31st_SECVPF

நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்துக்கு எதிர்வரும் 31ஆம் திகதி அடிக்கல் நாட்டுவிழா நடத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராயநகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் காணி உள்ளது. இதில் இருந்த பழைய கட்டடம் இடிக்கப்பட்டு வெற்றுக் காணியாக இருக்கின்றது. இந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று சங்கத்தில் புதிதாக பொறுப்புக்கு வந்த நிர்வாகிகள் அறிவித்தனர்.

கட்டட நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. மற்றும் நடிகர்கள் புதிய படங்களில் நடித்து சம்பள தொகையை கட்டிட நிதிக்கு வழங்குவதாகவும் அறிவித்தனர்.

ரூ.26 கோடி செலவில் 4 மாடிகளில் இந்த கட்டிடத்தை அமைக்கவுள்ளதோடு திரையரங்கம், உடற்பயிற்சி கூடம், நடன பயிற்சி கூடம் போன்றவையும் இங்கு அமைய உள்ளன.

இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி அளித்து உள்ளது. இதைத்தொடர்ந்து கட்டுமான பணிகளை தொடங்குவது குறித்து முடிவு செய்வதற்கு நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டமும், நடிகர் சங்க அறங்காவலர்கள் குழுக் கூட்டமும் அண்மையில் சென்னையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg