Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றிய மக்களின் வதிவிட உரிமை பறிக்கப்படக் கூடாது: சாதிக் கான்

In
Published: 11:15 GMT, Mar 28, 2017 |
0 Comments
1257
icon_com
This post was written by : Sylviya
11

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியமையின் பின்னரும் பிரித்தானியாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய மக்களின் வதிவிட உரிமை பறிக்கப்படாது என்பதற்கு, பிரித்தானிய செயற்குழு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என லண்டன் மேயர் சாதிக் கான் இன்று (செவ்வாய்கிழமை) தெரிவித்துள்ளார்.

பெல்ஜியத்தின் பிரஸ்சல்ஸ் நகரில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாளை (புதன்கிழமை) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை விலக்குவது தொடர்பில் பிரதமர் மே தலைமையிலான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே சாதிக் கான் குறித்த கருத்தை குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள மக்கள் தொகையில் 3.3 மில்லியன் ஐரோப்பிய நாட்டவர்கள் எனவும் அவர்களில் 1 மில்லியன் லண்டனிலேயே வாழ்ந்து  வருகின்றனர் எனவும் சாதிக் கான் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகுவதால் பிரித்தானியாவுக்கு தண்டனை அளிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் நடந்துகொள்ளக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நாளை (புதன்கிழமை)  பிரதமர் மே லிஸ்பன் விதியின் 50 ஆவது சரத்தை செயலாக்குவது தொடர்பில் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளார் எனவும் அதன் பின்னர் 48 மணித்தியாலத்திற்கு இடைப்பட்ட நேரத்தில், ஒன்றியத்தில் உள்ள ஏனைய 27 நாடுகளுக்கு இது தொடர்பில் வரைவு ஒன்றை ட்ஸ்க் அனுப்பி வைப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg