Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிறரின் கூற்றை கேட்டு வாழ்வை இழக்க தயாரில்லை: மரியா ஷரபோவா

In டெனிஸ்
Published: 09:08 GMT, Mar 29, 2017 |
0 Comments
1164
icon_com
This post was written by : Risha

பிறரின் கூற்றுக்களை கேட்டு, எனது தொழில் ரீதியான வாழ்வை இழக்க தயாராக இல்லை என தடைசெய்யப்பட்ட போதை மருந்தை உபயோகப்படுத்தியதற்காக போட்டித் தடையை எதிர்கொண்டிருந்த, ரஷ்யாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தெரிவித்துள்ளார்.

ஷரபோவாவிற்கு விதிக்கப்பட்டிருந்த 15 மாத போட்டித்தடை நிறைவடைந்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் போட்டியில் பங்கேற்கவுள்ள நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன், நிச்சயமாக மற்றுமொரு ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்ற வேண்டும் என்பதே எனது கனவு. அதன்படி, போட்டித்தடை நீங்கி மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஸ்டட்கர்ட் கிராண்ட் பிரிக்ஸ் டென்னிஸ் தொடரினூடாக எனது பயணத்தை ஆரம்பிக்க உள்ளேன் என்றும் தெரிவித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளின் போது இடம்பெற்ற வீரர்களுக்கான ஊக்க மருந்து சோதனைபோது, மரியா ஷரபோவா தடை செய்யப்பட்ட போதை மருந்தை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் போட்டித்தடை விதிக்கப்படுவதாக கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. பின்னர் அவரது மேன்முறையீட்மை தொடர்ந்து விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றம் அவரது போட்டித்தடையை 15 மாதங்களாக குறைத்து தீர்ப்பளிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg