Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்காவுடனான இறுதி போட்டி சமநிலை: சொந்த மண்ணில் தொடரை இழந்தது நியூசிலாந்து

In கிாிக்கட்
Updated: 10:58 GMT, Mar 29, 2017 | Published: 09:30 GMT, Mar 29, 2017 |
0 Comments
1276
icon_com
This post was written by : Risha
CRICKET-NZL-RSA

தென்னாபிரிக்காவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு ஓவரேனும் வீசப்படாமல் நிறுத்தப்பட்டது. இதனால் இறுதி போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

இதன்மூலம் மூன்று போட்டிகளை கொண்ட தொடரை சொந்த மண்ணில் இழந்தது நியூசிலாந்து அணி. அதன்படி 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா தொடரை கைப்பற்றியது.

தென்னாபிரிக்கா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹெமில்டன் சீடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

இறுதி போட்டியின் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 89.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 314 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக குவிண்டன் டி கொக் 90 ஓட்டங்களையும், பிளஸ்சிஸ் 53 ஓட்டங்களையும், ஹஷிம் அம்லா 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் மாட் ஹென்ரி 4 விக்கெட்டுகளையும், நீல் வோக்னர் 3 விக்கெட்டுகளையும், கொலின் டி கிராண்ட்ஹோம் 2 விக்கெட்டுகளையும், மிச்செல் சேன்ட்னர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 162 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 489 ஓட்டங்களை பெற்றது. நியூசிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 176 ஓட்டங்களையும், ஜீட் றவல் 88 ஓட்டங்களையும், கொலின் டி கிராண்ட்ஹோம் 57 ஓட்டங்களையும், ரொம் லதம் 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் மோர்ன் மோர்கெல் மற்றும் றபாடா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், கேஷவ் மஹராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அந்தவகையில், 175 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி, நியூசிலாந்து வீரர்களின் அபார பந்துவீச்சில் தடுமாறியது. ஆட்ட நேர முடிவில் தென்னாபிரிக்க அணி 2ஆவது இன்னிங்ஸில் 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 80 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தது.

போட்டியின் இறுதி நாளான இன்று தென்னாபிரிக்க அணியை இலகுவாக வீழ்த்தி வெற்றிபெறும் எதிர்பார்ப்புடன் நியூசிலாந்த இருந்தது. எனினும், இன்று முழு நாளும் அடை மழை பெய்து வந்த நிலையில், போட்டி தடைப்பட்டு சமநிலையடைந்தது.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் வென்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg