Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மியாமி ஓபன் டென்னிஸ்: பெடரர்- நடால் காலிறுதிக்கு தகுதி

In டெனிஸ்
Published: 09:46 GMT, Mar 29, 2017 |
0 Comments
1162
icon_com
This post was written by : Risha

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில், ரொஜர் பெடரர், ரபேல் நடால் மற்றும் கீ நிஷிகோரி ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இன்று (புதன்கிழமை) நடைபெற்ற நான்காம் சுற்றுப் போட்டிகளில் வெற்றியீட்டிய மூவரும், காலிறுதிப் போட்டியில் விளையாடவுள்ளனர்.
ஸ்பெயின் வீரர் ரொபர்டா பாடிஸ்டாவை எதிர்கொண்ட, சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் 7:6,7:6, என்ற செட்டில் வெற்றி பெற்று அடுத்த காலிறுதிச் சுற்றுக் முன்னேறினார்.

அதேவேளை, பிரான்ஸ் வீரர் நிக்கோலஸ் மாஹட்டை எதிர்கொண்ட ஸ்பெய்ன் வீரர் ரபேல் நடால் 6:4, 7:6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

அந்தவரிசையில், ஆஜர்ன்டீனாவின் ஃபெடறிகோ டெல்போனிஸை எதிர்கொண்ட, ஜப்பான் வீரர் கீ நிஷிகோரி 6:3, 4:6, 6:4 என்ற செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg