Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: ஜி.கே வாசன்

In இந்தியா
Updated: 07:35 GMT, Mar 30, 2017 | Published: 07:34 GMT, Mar 30, 2017 |
0 Comments
1285
This post was written by : Elakkiya

சுங்கக்கட்டண  உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஜி.கே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ மத்திய அரசு ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் எதிர்வரும்; ஏப்ரல் மாதத்தில் மீண்டும் சுங்கக்கட்டணத்தை உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 44 சுங்கச்சாவடிகளில் இப்போது சுமார் 18 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வடையப் போகின்றது.

சுங்கக்கட்டண உயர்வால் லொறி உரிமையாளர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், சுற்றுலாப் பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். வாகன உரிமையாளர்கள் அவர்களின் வாகனத்திற்கு சாலை வரி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் எதற்காக சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும்.

சுங்கச்சாவடிகளை பராமரிப்பதற்காகவும், பொருளாதாரத்தை ஈட்டுவதற்காகவும் மக்கள் மீது சுமையை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு சுங்கக்கட்டணத்தை திணிப்பது ஏற்புடையதல்ல.

மத்திய அரசு காலாவதியான சுங்கச் சாவடிகளை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் உடனடியாக அகற்ற வேண்டும். முக்கியமாக அனைத்து சுங்கச்சாவடிகளையும் படிப்படியாக மூட வேண்டும். அல்லது சுங்கக்கட்டணத்தை அடியோடு ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் மத்திய அரசே சுங்கக்கட்டணத்திற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.

ஏற்கனவே விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்கள் போதிய பொருளாதாரமின்றி வாழ்கின்ற சூழலில் இது போன்ற நடவடிக்கைகளில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபடக்கூடாது என்று த.மா.கா. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg