Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் ரயில்கடவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

In
Updated: 09:32 GMT, Apr 19, 2017 | Published: 05:14 GMT, Apr 19, 2017 |
0 Comments
1122

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமை புரியும் ரயில்  கடவை  ஊழியர்கள் இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்னால் பாரிய ஆப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

நீண்டகாலமாக தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தங்களை நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்குமாறு கோரியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ‘நல்லாட்சியில் நல்ல அடிமைகள் நாங்கள், ‘அரசே! ஊழியர்களின் நியமனத்தை காலம் தாழ்த்தி அரசியல் இலாபம் தேடாதே!’, ‘நாள் ஒன்றுக்கு 250 ரூபா போதுமா?’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம், பொலிஸ் மா அதிபருக்கான தங்களது கோரிக்கை அடங்கிய  மகஜர் ஒன்றையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்துள்ளனர்.

தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக்கோரி கடந்த இருவாரங்களாக வடக்கு, கிழக்கு மாகாண ரயில்கடவை  ஊழியர்கள் பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 72 பேர் தற்காலிக அடிப்படையில் ரயில்கடவை  ஊழியர்களாக பணியாற்றிவரும் அதேவேளை, நாடளாவிய ரீதியில் சுமார் 3 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)