Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள்: பிரதமர் அறிவிப்பு

In இலங்கை
Updated: 06:52 GMT, Apr 19, 2017 | Published: 06:37 GMT, Apr 19, 2017 |
0 Comments
1179
icon_com
This post was written by : Risha
mee

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் வீடுகள் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

வியட்னாமிற்கான விஜயத்தை நிறைவுசெய்து இன்று (புதன்கிழமை) அதிகாலை நாடு திரும்பிய பிரதமர், மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் குறித்து விசாரித்த பிரதமர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார்.

புத்தாண்டு தினத்தில் மீதொட்டமுல்ல பகுதியில் ஏற்பட்ட இவ் அனர்த்தத்தில் 31 பேர் உயிரிழந்ததுடன், 11 பேர்வரை காணாமல் போயுள்ள நிலையில் இன்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg