Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓய்வு பெறும் அப்ரிடிக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களின் நெகிழ்ச்சியூட்டும் பரிசு

In கிாிக்கட்
Updated: 12:38 GMT, Apr 20, 2017 | Published: 06:54 GMT, Apr 20, 2017 |
0 Comments
4894
This post was written by : Anojkiyan

சர்வதேச ரி-ருவென்ரி கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிசிறந்த வீரரான சயிட் அப்ரிடிக்கு, இந்திய கிரிக்கெட் வீரர்கள் நெகிழ்ச்சியூட்டும் பரிசொன்றை வழங்கியுள்ளனர்.

விராட் கோஹ்லி, யுவராஜ் சிங், ஆசிஷ் நெஹ்ரா, பும்ரா, ரெய்னா, நெகி, மொஹமட் ஷமி, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ரஹானே, தவான் உட்பட இந்திய அணி வீரர்கள் தமது கையொப்பமிட்ட கோஹ்லியின் ரி-சேட்டை அப்ரிடிக்கு பரிசாக வழங்கினர்.

ரி-சேட்டில் கையொப்பமிட்ட நினைவு பரிசை அப்ரிடிக்கு வழங்கியது குறித்து கோஹ்லி கூறுகையில், “சயிட் பாய் வாழ்த்துக்கள், உங்களுக்கு எதிராக விளையாடியது எப்போதும் மகிழ்ச்சி” என தெரிவித்தார்.

ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அப்ரிடி, சமீபத்தில் சர்வதேச ரி-ருவென்ரி கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறபோவதாக அறிவித்தார்.

27 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அப்ரிடி 1176 ஓட்டங்களை குவித்துள்ளார், அதிகபட்சமாக 156 ஓட்டங்களையும் 48 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 398 ஒருநாள் போட்டிகளில் 8064 ஓட்டங்களை குவித்துள்ள அப்ரிடி அதிகபட்சமாக 124 ஓட்டங்களையும், 395 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 98 சர்வதேச ரி-ருவென்ரி போட்டிகளில் களம் கண்ட அப்ரிடி, 1405 ஓட்டங்களையும் 97 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ag

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg