Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் கமலுக்கு பாராட்டு விழா: விஷால் கோரிக்கை

In சினிமா
Published: 10:19 GMT, Apr 23, 2017 |
0 Comments
1066
icon_com
This post was written by : Vithushagan
201704231141345098_vishal2-X._L_styvpf

செவாலியர்  விருது பெற்றிருக்கும் நடிகர் கமலுக்கு நடைபெறவுள்ள பாராட்டு விழாவுக்கு பிரதமர் மோடி தலைமையேற்க வேண்டும் என நடிகர் விஷால் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்னிந்திய திரைப்படத் துறையினர் சந்திக்கும் சவால்கள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது இந்த இந்த கூட்டத்தில்  மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்வு குறித்து செய்தியாளர்கள் மத்தியில் விஷால் பேசும் போது ‘ஜிஎஸ்டி வரி விதிப்பு அமுலுக்கு வரும் நிலையில் தென்னிந்திய திரைப்படங்களுக்கு குறைந்த வரி விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். திருட்டு விசிடி தொடர்பாக பல்வேறு விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் ISP (Internet Service Provider) தொடர்பான விஷயங்களில் மத்திய அரசின் தலையீடு இருந்தால் வெகுவிரைவில் திருட்டு விசிடியை தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளோம்.

ப்ரெஞ்ச் அரசு கமலுக்கு செவாலியர் விருது கொடுத்து கொளரவித்துள்ளது. அதற்கு இந்திய திரையுலகம் சார்பில் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது விருப்பம். அந்த விழா பிரதமர் மோடி தலைமையில் நடந்தால் நன்றாக இருக்கும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம்’ என்று தெரிவித்தார் விஷால்

இதில், கமல்ஹாசன் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg