Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிலிப்பைன்ஸில் உல்லாச பயணிகளை கடத்த முற்பட்ட தீவிரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை

In
Updated: 13:09 GMT, Apr 23, 2017 | Published: 11:19 GMT, Apr 23, 2017 |
0 Comments
1152
This post was written by : Anojkiyan

பிலிப்பைன்ஸிற்கு வருகை தந்த உல்லாச பயணிகளை, கடத்த முற்பட்ட அபு சய்யாப் தீவிரவாத அமைப்பைr; சேர்ந்த மூன்று பேரை அந்நாட்டு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

போஹோல் தீவுக்குட்பட்ட பகுதிகளில் பதுங்கி இருந்த குறித்த தீவிரவாதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய அபு சய்யாப் தீவிரவாதிகள் பிலிப்பைன்ஸிற்கு வரும் உல்லாச பயணிகளை கடத்தி, அவர்களின் உறவினர்களிடம் கப்பம் கோருகின்றனர். இவ்வாறு கொடுக்க மறுக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்படுகின்றனர்.

கடந்த 11ஆம் திகதி போஹோல் தீவுக்கு வந்துள்ள சில வெளிநாட்டினரை கடத்திச் செல்வதற்காக இயந்திர துப்பாக்கிகளுடன் வந்த அபு சய்யாப் தீவிரவாதிகளை முற்றுகையிட்ட பொலிஸார், ஆறுபேரை சுட்டுக்கொன்றனர். தீவிரவாதிகள் நடத்திய பதில் தாக்குலில்  பொலிஸ் அதிகாரியொருவர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg