Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

UKIP கட்சி, இஸ்லாமியத்திற்கு எதிரான கலாசாரத்தை தூண்டுவதாக குற்றச்சாட்டு

In
Updated: 12:00 GMT, Apr 24, 2017 | Published: 08:14 GMT, Apr 24, 2017 |
0 Comments
1221
This post was written by : Elakkiya
cdf13fdf-af72-495c-90f5-e895780b1c5b

UKIP கட்சி எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இஸ்லாமியத்திற்கு எதிரான கலாசாரத்தை தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

UKIP கட்சியின் தலைவர் பவுல் நுட்டால் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின் போது இஸ்லாமியத்திற்கு எதிரான கலாசாரத்தை தூண்டிவிடுவது போன்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

குறித்த நேர்காணலில், முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் புர்காவை பிரித்தானியாவில் தடை செய்வதற்கும் ஷரியா நீதிமன்றங்களை இல்லாதொழிப்பதற்கும் தமது கட்சி முனைப்பு காட்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று, நாட்டில் யூதமத நீதிமன்றங்களை தடை செய்வதற்கு எந்தவொரு திட்டமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இக்கருத்துக்கள் பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்து வருவதோடு, இஸ்லாமியத்திற்கு எதிரான கலாசாரத்தை UKIP கட்சி தூண்டி வருகின்றதெனவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg