Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஸ்பெயினில் ஐ.எஸ். சந்தேகத்தின் பேரில் எட்டு பேர் கைது

In ஐரோப்பா
Updated: 11:55 GMT, Apr 25, 2017 | Published: 09:58 GMT, Apr 25, 2017 |
0 Comments
1090
icon_com
This post was written by : Risha

ஸ்பெயினின் இரண்டாவது மிகப்பெரிய நகரான பார்சிலோனாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கையின்போது எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்பெயின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 21 முதல் 39 வயதுடைய மொரோக்கோ பிரஜைகள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பெல்ஜிய பொலிஸாருடன் இணைந்து இன்றைய தேடுதல் நடவடிக்கைளும், விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். எனினும், கைதுசெய்யப்பட்டவர்களுக்கு பெல்ஜியத்துடன் என்ன தொடர்பு என்பது குறித்து அவர் எதனையும் வெளியிடவில்லை.

இதேவேளை, ஐ.எஸ். உடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவ்வாண்டில் மாத்திரம் இதுவரை 22 பேர் ஸ்பெயின் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg