Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் குறித்த பிரெக்சிற் உத்தரவாதத்திற்கு எதிர்ப்பு

In
Updated: 10:56 GMT, Apr 25, 2017 | Published: 10:56 GMT, Apr 25, 2017 |
0 Comments
1339
This post was written by : Risha

பிரித்தானியாவிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் பிரெக்சிற்-இற்கு பின்னரும் நாட்டில் தொடர்ந்து இருக்க முடியும் என்ற தொழிற்கட்சியின் ஒருதலைப்பட்ச உத்தரவாதத்தை பெரும்பாலான பிரித்தானியர்கள் எதிர்த்ப்பதாக  ஸ்கை செய்தி ஸ்தாபனத்தின் கருத்துக் கணிப்புத் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தாம் வெற்றிபெறும் பட்சத்தில், வெற்றிபெற்ற முதல் நாளிலேயே இவ்வாறான உத்தரவாதம் வழங்கப்படும் என்ற தொழிற்கட்சியின் அறிவிப்பைத் தொடர்ந்தே இவ்வாறு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தொழிற்கட்சியினரின் குறித்த அறிவிப்பிற்கு 55 வீதமானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள பிரித்தானிய குடிமக்களுக்கு இந்த உத்தரவாதம் உறுதிசெய்யப்படின், பிரித்தானியாவிலும் அந்த உத்தரவாதம் உறுதிசெய்யப்பட வேண்டும் என்ற கன்சர்வேட்டிவ் கட்சியின் வாதத்தை 44 வீதமானோர் ஏற்றுள்ளனர். அதேவேளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள பிரித்தானிய குடிமக்களுக்கு உத்தரவ்தாம் வழங்கப்பட்டாலும், இங்குள்ள ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு அத்தகைய உத்தரவாதம் வழங்கப்படக் கூடாது  என 11 வீதமானவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

29 வீதமானவர்கள் தொழிற்கட்சியின் உத்தரவாதத்தை ஆதரித்துள்ள அதேவேளை, 16 வீதமானோர் எந்தவொரு நிலைப்பாட்டையும் வெளியிடவில்லை.

.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg