Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிரேக்கத்தில் குடியேற்றவாசிகள் படகு கவிழ்ந்து விபத்து: 16 பேர் உயிரிழப்பு

In ஐரோப்பா
Updated: 12:13 GMT, Apr 25, 2017 | Published: 11:18 GMT, Apr 25, 2017 |
0 Comments
1115
This post was written by : Risha
Greek

துருக்கியிலிருந்து கிரேக்கத்திற்கு சட்டவிரோதமாக பயணிக்க முயன்ற குடியேற்றவாசிகள் படகு மூழ்கி விபத்திற்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் இரு குழந்தைகளும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த அனர்த்தத்தில் சிக்கிய கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், படகில் 20 முதல் 25 பேர்வரை பயணித்திருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டுமுதல் இதுவரை துருக்கியிலிருந்து கிரேக்கத்திற்கு பயணிக்க முயற்சித்த சுமார் நூறிற்கும் அதிகமானவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வாறான சட்டவிரோத பயணத்தை தடுக்கும் வகையில் துருக்கிக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட உடன்பாடொன்றை அடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் சட்டவிரோத பயணங்கள் குறைவடைந்தது.

எனினும், மீண்டும் இந்த சட்டவிரோத பயணங்களை மேற்கொள்ளும் முயற்சிகள் அதிகரிக்கும் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg