Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போலி கடவுச்சீட்டு வழக்கில் சோட்டா ராஜனுக்கு சிறைத் தண்டனை

In இந்தியா
Updated: 12:08 GMT, Apr 25, 2017 | Published: 11:16 GMT, Apr 25, 2017 |
0 Comments
1180
This post was written by : Shailu
Chota Rajan

போலி கடவுச்சீட்டு தயாரிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், சோட்டா ராஜன் உள்ளிட்ட நான்கு பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, இவர்கள் அனைவருக்கும் தலா ரூ.15,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சோட்டா ராஜன், போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு பாலி தீவில் வைத்து இந்தோனேஷிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குற்றவாளிகள் நால்வரும் மும்பை தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நண்பர்கள் எனவும் கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg